கெடா மின் சிகரெட் விற்பனைக்குத் தடை விதிக்க பரிசீலிக்கிறது

சுங்கை பட்டாணி, ஏப்ரல்.27-

கெடா மாநிலத்தில் அடுத்த வாரம் நடைபெறவுள்ள ஆட்சிக்குழு கூட்டத்தில் வேப் மின் சிகரெட் விற்பனைக்குத் தடை விதிப்பது குறித்து பரிசீலிக்கப்படும் என்று அம்மாநில முதல்வர் சனூசி நோர் தெரிவித்துள்ளார். வேப் வழக்கமான சிகரெட்டை விட ஆபத்தானது என்ற தகவல்கள் தீவிரமாக கவனத்தில் கொள்ளப்படுவதாகவும் அவர் கூறினார். திரங்கானுவைப் போலவே கெடாவும் வேப் விற்பனைக்குத் தடை விதிக்க விரும்புகிறது. அதில் பல வேதிப்பொருட்கள் உள்ளன, சில சமயங்களில் மஷ்ரூம் போன்ற போதைப்பொருட்களும் கலக்கப்படுகின்றன என்று அவர் சுங்கை பட்டாணியில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

கெடா மாநிலத்தின் இளைய தலைமுறையினரின் நலனைப் பாதுகாக்க இந்த விவகாரத்தில் சிறந்த முடிவை எடுக்க மாநில அரசு முயற்சிக்கும். எனவே, இது குறித்து விவாதித்து நமது குழந்தைகளின் நலனுக்காக சிறந்த முடிவை எடுப்போம் என்று சனூசி கூறினார். முன்னதாக, திரங்கானு மாநில அரசு ஆகஸ்ட் 1 முதல் மாநிலம் முழுவதும் வேப் பொருட்கள் விற்பனைக்கு தடை விதிக்கவுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. இளைஞர்களின் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் வேப் விற்பனையையும் பயன்பாட்டையும் கட்டுப்படுத்தும் ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த அமலாக்கம் இருக்கும் என்று திரங்கானு ஊராட்சி, வீட்டுவசதி, சுகாதார ஆட்சிக்குழு உறுப்பினர் வான் சுகைரி வான் அப்துல்லா கூறியிருந்தார்.

WATCH OUR LATEST NEWS