அமெரிக்காசின் வரி விதிப்பு – மலேசியாவுடனான உறவு நிலைபெற வேண்டும் ! – பிரதமர் அன்வார் நம்பிக்கை

கோலாலம்பூர், ஏப்ரல்,27

அமெரிக்கா விதிக்க விரும்பும் வரிகள் பிரச்சினையைத் தீர்ப்பதில் மலேசியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான உறவு மிதமாக இருக்க வேண்டும் என்று பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார். எந்தவொரு நாடும், அமெரிக்கா உட்பட, மற்ற நாடுகளின் பொருளாதாரத்தைப் பாதிக்கும் வகையில் வர்த்தகத்தில் தன்னிச்சையாக எந்தவொரு வரியையும் விதிக்க முடியாது என்று அவர் கூறினார். எனவே, இந்த நெருக்கடியைத் தீர்க்கவும், மலேசியாவின் பொருளாதார வளர்ச்சி பாதுகாப்பாக இருப்பதை உறுதிப்படுத்தவும் மலேசியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன என்றார்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் விதித்த வரி உயர்வால் மலேசியா அதிர்ச்சியடைந்தது. வரியின் காரணமாக மலேசிய பொருட்கள் அமெரிக்காவுக்கு கொண்டு செல்லும்போது அதிக விலை கொண்டதாக மாறும். இது மலேசியாவின் பொருளாதாரத்திற்கு பிரச்சினையாக இருக்கும். தற்போது 90 நாட்களுக்கு வரி விதிப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. தாய்லாந்து, கம்போடியா, வியட்நாம், இந்தோனேசியா போன்ற அண்டை நாடுகளுக்கு அதிக வரி விதிக்கப்பட்டிருப்பதால் இது மலேசியாவுக்கு சிறிது நிம்மதி அளிக்கிறது. மலேசியா குறைக்கடத்தி உபகரணங்களின் முக்கிய உற்பத்தியாளராக இருப்பதால், அமெரிக்கா விதிக்கும் வரிகளில் ஏற்படும் மாற்றங்கள் உள்ளூர் குறைக்கடத்தி துறையை பாதிக்கக்கூடும். எனவே, எந்தவொரு மாற்றமும் நாட்டின் எதிர்காலத்தையும் மக்களையும் பாதிக்காத வகையில் மலேசியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான உறவு நீடிக்கப்பட வேண்டும் என அன்வார் குறிப்பிட்டார்.

மலேசியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான உறவு மிதமாக இருக்க வேண்டும். அப்போதுதான் மக்களின் வாழ்க்கை, வேலைவாய்ப்பு, நாட்டின் பொருளாதார வளர்ச்சி ஆகியன பாதிக்கப்படாது. இந்த பிரச்சினையை சமாளிக்க இரண்டு அமைச்சர்களை அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த அனுப்பியுள்ளோம். அவர்கள் புரிந்து கொண்டு நியாயமான முடிவு எடுக்கப்படும் என்று தாம் நம்புவதாக பிரதமர் கூறினார்.

WATCH OUR LATEST NEWS