கோலாலம்பூர், ஏப்ரல்.28-
பேரா,ஆயர் கூனிங் சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தலில் பாரிசான் நேஷனலை மக்கள் தேர்வு செய்தது குறித்து தாம் ஏமாற்றம் அடைவதாக முன்னாள் பரதமர் துன் மகாதீர் முகமது குறிப்பிட்டுள்ளார்.
இந்த இடைத் தேர்தலில் மக்களுக்காகப் போராடும் கட்சிக்கே மக்கள் வாக்களித்து, தேர்வு செய்து இருக்க வேண்டும் என்று துன் மகாதீர் குறிப்பிட்டார்.
மக்களுக்காக மட்டுமின்றி நாட்டிற்காகப் போராடி வரும் கட்சிக்கு மக்கள் வாக்களிக்காமல் போனது, தம்மால் புரிந்து கொள்ள முடியவில்லை என்று பெஜுவாங் கட்சி இன்று நடத்திய ஹரிராயா பொது உபசரிப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் துன் மகாதீர் இதனைத் தெரிவித்தார்.