கோலாலம்பூர், ஏப்ரல்.28-
போதைப் பொருள் மற்றும் போலி துப்பாக்கியை வைத்திருந்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள முன்னாள் ஆய்வியல் உதவியாளர் யூசோஃப் ராவுத்தர் வழக்கில் வரும் ஜுன் 12 ஆம் தேதி கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளிக்கிறது.
வழக்கு விசாரணையை பிராசிகியூஷன் தரப்பு முடித்துக் கொண்டதைத் தொடர்ந்து உயர் நீதிமன்ற நீதிபதி ஜாமீல் ஹுசேன், தீர்ப்பு தேதியை அறிவித்தார்.
யூசோஃப் ராவுத்தரை விடுதலை செய்வதா? அல்லது எதிர்வாதம் புரிய உத்தரவிடுவதா? என்பது குறித்து உயர் நீதிமன்றம் அன்றைய தினம் தீர்ப்பு அளிக்கிறது.
இவ்வழக்கில் பிராசிகியூஷன் தரப்பில் 13 சாட்சிகள் அழைக்கப்பட்டனர்.