இந்தியளவில் இயக்குநர் ராஜமௌலியைக் கொண்டு சேர்த்த திரைப்படம் பாகுபலி எனத் தாராளமாகக் கூறலாம். பிரம்மாண்டமாக உருவான இப்படத்தில் பிரபாஸ், அனுஷ்கா, சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன், ராணா, தமன்னா என ஒரு மிகப் பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்திருந்தனர்.
முதல் பாகம் மாபெரும் வெற்றியடைந்ததை தொடர்ந்து இரண்டாம் பாகமும் வெளிவந்தது. முதல் பாகத்தை விட இரண்டாம் பாகம் அதைவிட மூன்று மடங்கு வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்தது.
இந்நிலையில், பாகுபலி முதல் பாகம் வெளியாகி 10 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. அதனை அடுத்து, அப்படத்தை மீண்டும் வெளியிடுவது குறித்து தகவல் வெளியாகி உள்ளது.
அதன்படி, வரும் அக்டோபர் மாதம் திரையரங்குகளில் இப்படம் ரீ-ரிலீஸாக உள்ளது என படக்குழு அறிவித்துள்ளது.