ரியால் மாட்ரிட்டை விட்டு வெளியேறி பிரேசில் செல்கிறார் அன்செலோட்டி

மாட்ரிட், ஏப்ரல்.29-

ரியால் மாட்ரிட் நிர்வாகி கார்லோ அன்செலோட்டி, 2026 உலகக் கிண்ணக் கால்பந்தாட்டம் வரை பிரேசில் தேசிய அணி பயிற்றுனராகப்  பொறுப்பை ஏற்க உள்ளார் என்று ஜெர்மன் பத்திரிகை நிறுவனம் (dpa) தெரிவித்துள்ளது.  அந்த இத்தாலியர் தமது விலகலை சம்பந்தப்பட்ட தரப்பிடம் தெரியப்படுத்தி விட்டதாக கூறப்படுகிறது. 
 
ஜூன் மாதம் நடைபெறும் அனைத்துலக ஆட்டங்களின் போது அன்செலோட்டி பிரேசிலுக்குப் பயிற்சியளிப்பார் எனத் தெரிகிறது.  எனவே ஜூன் 14 முதல் ஜூலை 13 வரை அமெரிக்காவில் திட்டமிடப்பட்டுள்ள கிளப்புகளுக்கு இடையிலான உலகக் கிண்ண ஆட்டத்திற்கு அவரால் மாட்ரிட்டைப் பயிற்றுவிக்க முடியாது. 
 
கையெழுத்து மட்டுமே இல்லாமல், பிரேசிலுடன் வாய்மொழி ஒப்பந்தங்கள் நடைமுறையில் இருப்பதாக தகவல் கூறுகிறது.. 
 
65 வயதான அன்செலோட்டி, 2026 வரை மாட்ரிட்டுடன் ஒப்பந்தத்தில் உள்ளார். இருப்பினும், சாம்பியன்ஸ் லீக் காலிறுதியில் அவ்வணி வெளியேறியது மற்றும் பார்சிலோனாவுக்கு எதிரான கோபா டெல் ரே இறுதிப் போட்டியில் தோல்வி போன்ற அண்மைய பின்னடைவுகள் காரணமாக அவர் விலகுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 
 
அன்செலோட்டி 2021 முதல் இரண்டாவது முறையாக மாட்ரிட்டைப் பயிற்றுவித்து வருகிறார். அந்த நேரத்தில் அவர் இரண்டு முறை சாம்பியன்ஸ் லீக்கை வென்றுள்ளார். 

WATCH OUR LATEST NEWS