சுகாதார அதிகாரி மெக்ஸ்வெல் மலையில் உயிரிழந்தார்

தைப்பிங், ஏப்ரல்.30-

தைப்பிங்கில் மெக்ஸ்வெல் எனப்படும் புக்கிட் லாருட்டில் மலையேறும் பயிற்சியில் ஈடுபட்டு இருந்த சுகாதார அதிகாரி ஒருவர் மூச்சுத் திணறலுக்கு ஆளாகி உயிரிழந்தார்.

இச்சம்பவம் இன்று காலையில் நிகழ்ந்தது. 50 வயதுடைய அஹ்மாட் சஹாரிம் சவுதி என்ற அந்த மருத்துவ அதிகாரி, கோல கங்சார் மற்றும் லாருட் மாதாங் செலாமா மாவட்டங்களின் சுகாதார அலுவலகங்களில் பணியாற்றி வரும் 120 சக பணியாளர்களுடன் புக்கிட் லாருட் மலையில் ஏறிக் கொண்டு இருந்த போது கடும் மூச்சுத் திணறலுக்கு ஆளானார்.

இது தொடர்பாக காலை 10.40 மணியளவில் தாங்கள் தீயணைப்பு, மீட்புப் படையினர் அவசர அழைப்பைப் பெற்றதாக பேரா மாநில உதவி இயக்குநர் சபாரொட்ஸி நோர் அஹ்மாட் தெரிவித்தார்.

கமுந்திங் மற்றும் தைப்பிங் ஆகிய நிலையங்களைச் சேர்ந்த 21 வீரர்கள் ஜீப் வண்டிகளில் புக்கிட் லாருட் ரெசோர்ட், சோதனை மையத்தைச் சென்றடைந்த பின்னர் அந்த அதிகாரி மயங்கி விழுந்த இடத்திற்குக் கால் நடையாகச் சென்றனர்.

அந்த சுகாதார அதிகாரி இறந்து விட்டதாகத் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து வீரர்கள் மூலம் அவரின் உடல் மலையடிவாரத்திற்குத் தூக்கி வரப்பட்டதாக சபாரொட்ஸி நோர் அஹ்மாட் குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS