அந்த மண்வாரி இயந்திரம் அடையாளம் காணப்பட்டது

சுபாங் ஜெயா, ஏப்ரல்.30-

கடந்த ஏப்ரல் முதல் தேதி சுபாங் ஜெயா, புத்ரா ஹைட்ஸில் எரிவாயு குழாய் வெடி விபத்து நிகழ்ந்த பகுதியில் மண்ணில் புதையுண்டதாக அஞ்சப்பட்ட மண் வாரி இயந்திரம் புதையுண்ட இடம், அடையாளம் காணப்பட்டுள்ளதாக சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஹுசேன் ஒமார் கான் தெரிவித்தார்.

வெடி விபத்து நிகழ்ந்த பகுதிக்கு அருகில் நிறுத்தப்பட்டு இருந்த அந்த மண்வாரி இயந்திரம் புதையுண்ட நிலையில், அதனை அடிப்படையாகக் கொண்டு தொடர்ந்து விசாரணை செய்யப்பட்டு வருவதாக டத்தோ ஹுசேன் ஒமார் கான் குறிப்பிட்டார்.

விசாரணையின் ஒரு பகுதியாக மண் வாரி இயந்திரத்தை மீட்கும் நடவடிக்கையும் அடங்கும். இன்னும் ஒரு வாரத்தில் அதனை மீட்கும் பணி நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.

WATCH OUR LATEST NEWS