கிளினிக்குகளில் மருந்து விலைகள் காட்சிக்கு வைக்கும் நடைமுறை நாளை மே முதல் தேதி அமலுக்கு வருகிறது

பெட்டாலிங் ஜெயா, ஏப்ரல்.30-

பொது மருந்து கிளினிக்குகளில், மருந்து விலைகள் காட்சிக்கு வைக்கப்படும் நடைமுறை நாளை மே முதல் தேதி நடைமுறைக்கு வருகிறது.

மருந்துப் பொருட்களின் விலைகள், காட்சிக்கு வைக்கப்படுவது மூலம் மருந்துகள் விலையேற்றம் கண்டு விட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு எந்த அளவிற்கு உண்மை என்பதை நேரடியாகக் கண்டறிய முடியும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

கிளினிக்குகளில் சிகிச்சைக் கட்டண உயர்வுக்கு முக்கியக் காரணம் மருந்துப் பொருட்கள் விலையேற்றம் கண்டு விட்டதாகக் கூறப்படும் நிலையில், மருந்து விலைகள் காட்சிக்கு வைக்கப்படுவது மூலம் அது உண்மைதானா? என்பதை மக்கள் அறியக்கூடிய வாய்ப்பு ஏற்படும் என்று பாயான் பாரு நாடாளுமன்ற உறுப்பினர் சிம் ஸீ ஸின் தெரிவித்தார்.

மருந்தகங்களில் விற்கப்படும் மருந்துகளின் விலையை விட தனியார் மருத்துவமனைகளில் மருந்து விலைகள் அதிகமாகும் என்று பல தரப்பினர் கூறி வருகின்றனர்.

இந்நிலையில் மருந்துகளின் விலைகளைக் காட்சிக்கு வைக்கப்படுவது மூலம் அந்த மருந்துகளைச் சம்பந்தப்பட்ட கிளினிக் அல்லது மருத்துவமனையில் வாங்கலாமா? அல்லது வெளியே மருந்தகங்களில் வாங்கிக் கொள்ளலாமா என்று முடிவு செய்யக்கூடிய ஒரு விருப்புரிமை வழங்கப்பட்டுள்ளது என்று அந்த எம்.பி. குறிப்பிட்டுள்ளார்.

WATCH OUR LATEST NEWS