போலீஸ்காரரின் காதைக் கடித்துத் துண்டாக்கினார்

கோலாலம்பூர், ஏப்ரல்.30-

கைது நடவடிக்கையின் போது, போலீஸ்காரரின் காதைக் கடித்துத் துண்டித்து விட்டதாக நைஜீரிய ஆடவர் ஒருவர், கோலாலம்பூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டார்.

38 வயது Okenyehhike Kelvin Obianke என்ற அந்த நைஜீரிய ஆடவர், பலத்த போலீஸ் காவலுடன் நீதிமன்றத்திற்குக் கொண்டு வரப்பட்டு, மாஜிஸ்திரேட் எஸ். மகேஸ்வரியின் முன்னிலையில் நிறுத்தப்பட்டு குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.

கடந்த ஏப்ரல் 25 ஆம் தேதி காலை 10.10 மணியளவில் கோலாலாம்பூர், கெப்போங், மெட்ரோ பிரிமாவில் உள்ள ஒரு கிளினிக்கின் முன்புறம் அந்த அந்நிய ஆடவர் இக்குற்றத்தைப் புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

எனினும் அந்த நைஜீரிய ஆடவர் தனக்கு எதிரான குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரியுள்ளார்.

WATCH OUR LATEST NEWS