70 வயது முதியவருக்கு 7 நாள் தடுப்புக் காவல்

புக்கிட் மெர்தாஜாம், ஏப்ரல்.30-

கடந்த ஞாயிற்றுக்கிழமை பினாங்கு, புக்கிட் மெர்தாஜாம், சேரோக் தோகூனில் உள்ள ஒரு கொட்டகையில் தனது நண்பரைக் கத்தியால் குத்திக் கொலை செய்தாக நம்பப்படும் 70 வயது முதியவருக்கு 7 நாள் தடுப்புக் காவல் அனுமதியை நீதிமன்றத்திலிருந்து போலீசார் பெற்றுள்ளனர்.

இந்தக் கொலை தொடர்பில் விசாரணைக்கு உதவும் வகையில் சம்பவம் நிகழும் போது உடன் இருந்த சந்தேக நபர் உட்பட ஐவர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் நால்வர் விடுவிக்கப்பட்ட நிலையில் 70 வயது நபரை மட்டும் தடுத்து வைப்பதற்கு அனுமதி பெற்றப்பட்டுள்ளதாக செபராங் பிறை தெங்கா மாவட்ட போலீஸ் தலைவர் ஹெல்மி அரிஸ் தெரிவித்தார்.

சம்பந்தப்பட்ட நபர், மாச்சாங் பூபோக்கில் பிடிபட்டதாக அவர் குறிப்பிட்டார். இச்சம்பவத்தில் கொலை செய்யப்பட்ட 63 வயது நபர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக ஹெல்மி அரிஸ் குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS