மலேசியர்களுக்குச் சிறந்த இந்தியப் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை வழங்க ஆஸ்ட்ரோவும் சன் நெக்ஸ்ட் (Sun NXT) கூட்டாண்மையில் இணைந்துள்ளன

கோலாலம்பூர், மே.02-

ஆஸ்ட்ரோவில் சன் நெக்ஸ்ட் (Sun NXT) மூலம் இந்தியப் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் முதல், scream (அலைவரிசை 100)  அலைவரிசையில் விரைவில் ஒளியேறும் சிலிர்ப்பூட்டும் திரைப்படங்கள் மற்றும் புவி நாளை முன்னிட்டு ரிம்பா கிட்டா: ஸ்ட்ரீம்  & வின் கீவ்வேய் வழி சுற்றுச்சூழல் பொறுப்புணர்வு மீதான முக்கியத்துவம் வரை இந்த மே மாதம் அனைத்து மலேசியர்களுக்கும் விரிவான மற்றும் ஈர்க்கக்கூடிய அனுபவத்தை வழங்க ஆஸ்ட்ரோ உறுதி பூண்டுள்ளது.

இன்று முதல், அனைத்து ஆஸ்ட்ரோ வாடிக்கையாளர்களும் இந்தியப் பொழுதுபோக்குக்கானத் தளமான சன் நெக்ஸ்டை தங்களின் தற்போதையச் சந்தாக்களில் சேர்க்கும் வாய்ப்பைப் பெறுவார்கள். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், பெங்காலி மற்றும் மராத்தி ஆகிய ஆறு இந்திய மொழிகளில் பல்வேறுத் திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் நேரலைத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுடன் சன் நெக்ஸ்ட், ஆஸ்ட்ரோ வாடிக்கையாளர்களுக்கு அவர்களின் அல்ட்ரா/அல்டி பெட்டி, வலைத்தளம் அல்லது கைப்பேசி செயலிஆகியவற்றில், எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் பல்வேறு இந்தியப் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை வழங்குகிறது.

சன் நெக்ஸ்ட் இரண்டு வழியாக ஆஸ்ட்ரோவில் கிடைக்கிறது. சன்  நெக்ஸ்ட் லைட் அனைத்து இந்தியன் பேவரட்ஸ்/மகாராஜா தொகுப்பு வாடிக்கையாளர்களுக்கும் கூடுதல் கட்டணம் இல்லாமல் சேர்க்கப்பட்டுள்ள சன் நெக்ஸ்ட் லைட், சன் டிவிஎச்டி, சன் மியூசிக் எச்டி, சன் லைஃப், சன் நியூஸ், ஆதித்யா மற்றும் கேடிவி ஆகிய ஆறு பிரபலமான சன் அலைவரிசைகளின் உள்ளடக்கத்தையும் 2,000 மணிநேரத்திற்கும் அதிகமான ஆன்-டிமாண்ட் உள்ளடக்கத்தையும் வழங்குகிறது.

சன் நெக்ஸ்ட் பிரீமியம் அனைத்து ஆஸ்ட்ரோ வாடிக்கையாளர்களுக்கும் மாதம் ரிம25க்குக் கிடைக்கப் பெறும். இது, பல்வேறு மொழிகளில் 34 அலைவரிசைகளின் அணுகல் மற்றும் 50,000 மணிநேரத்திற்கும் அதிகமான ஆன்-டிமாண்ட் உள்ளடக்கம் உட்பட வாடிக்கையாள் முழு சன் நெக்ஸ்ட் நூலகத்தையும் அனுபவிக்கலாம். 

கூடுதல் கட்டணம் இல்லாமல் டிவி, ஆன் டிமாண்ட் மற்றும் ஆஸ்ட்ரோ கோ ஆகியவற்றிலும் சூகாவிலும் கிடைக்கும். தேர்ந்தெடுக்கப்பட்ட தலைப்புகளுடனும் அனைத்து ஆஸ்ட்ரோ வாடிக்கையாளர்களுக்கும் திகில் மற்றும்  அர்ப்பணிக்கப்பட்ட ஒரு சிறப்பு பாப்-அப் அலைவரிசையான ஸ்கிரீமில் மே 1 முதல் 31, 2025 வரைத் திகில் இரசிகர்களுக்கு ஒரு விருந்துக் காத்திருக்கிறது.

ஏர்த் டே ரிம்பா கிட்டா – ஸ்ட்ரீம் மற்றும் வின் கீவ்அவே மூலம் நோக்கத்துடன் ஸ்ட்ரீம் செய்ய ஆஸ்ட்ரோ வாடிக்கையாளர்களை அழைக்கிறது. இந்த பிரச்சாரம் மே 20, 2025 வரை நீடிக்கும், மேலும் வாடிக்கையாளர்கள் MyAstro செயலியில் உள் நுழைவதன் மூலம் இந்தப் பரிசுப் போட்டியில் பங்கேற்கலாம்.

WATCH OUR LATEST NEWS