ஸ்யாமென், மே.02-
2025 சுடிர்மான் கிண்ணத்தைக் கைப்பற்றும் மலேசிய பூப்பந்து அணியின் எண்ணம் ஈடேறவில்லை. இன்று காலை நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில் அது நடப்பு வெற்றியாளரான சீனாவிடம் 0-3 என்ற புள்ளிகளில் தோல்வி கண்டது. சீனாவை வீழ்த்தும் அதன் முயற்சி கைகூடவில்லை.
முதலில் கலப்பு இரட்டையர்களான செங் தாங் ஜீ- தோ ஈ வெய் முதல் புள்ளியைப் பெறுவார்கள் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. எனினும் சீன இணை 49 நிமிடங்களில் நேரடி செட்களில் மலேசிய ஜோடியை வீழ்த்தியது. தொடர்ந்து ஆடவர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்திலும் மலேசியாவுக்குத் தோல்வியே கிடைத்தது.
மூன்றாம் ஆட்டத்தில் மகளிர் ஒற்றையர் பிரிவு வீராங்கனை கெ. லெட்சனா நேரடி செட்களில் வீழ்ந்தார். அதனை அடுத்து வெற்றி சீனா வசம் ஆனது. சீனா கிண்ணத்தைக் கைப்பற்றும் நிலையை நெருங்கியுள்ள வேளையில், அடுத்த சுற்றில் அது தனது பரம வைரியான ஜப்பானைச் சந்திக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.