சிலி, அர்ஜென்டினாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை அறிவிப்பு

சாண்டியாகோ, மே.02-

சிலி மற்றும் அர்ஜென்டினாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது. தென் அமெரிக்கா கண்டத்தில் அமைந்துள்ள சிலி நாட்டில் மாகல்லன்ஸ் பகுதியில் உள்ள புவேர்ட்டோ வில்லியம்ஸுக்கு தெற்கே 218 கி.மீ. தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் 7.5 ஆக பதிவாகி இருக்கிறது.

இதேபோன்று, அர்ஜென்டினாவில் உசுயா என்ற பகுதியில் 7.5 என்ற ரிக்டர் அளவுகோலில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இரு நாடுகளில் ஏற்பட்டுள்ள நிலநடுக்கங்களைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

தற்போது அங்குள்ள நிலைமைகளைத் தீவிரமாக கண்காணித்து வருவதாக அந்நாடுகளின் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.

WATCH OUR LATEST NEWS