நடிகர் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் எனக் கொண்டாடப்படுகிறார். கடைசியாக ரஜினி நடிப்பில் வேட்டையன் என்ற படம் வெளியானது. ஆனால் அது பாக்ஸ் ஆபிஸிலும் சரி, விமர்சனத்திலும் சரி நல்ல வரவேற்பைப் பெறவில்லை.
தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடித்து முடித்துள்ள ரஜினிகாந்த், தற்போது ஜெயிலர் 2 படத்தில் பரபரப்பாக நடித்து வருகிறார். கடந்த 2023ம் ஆண்டு ஜெயிலர் படம் வெளியாகி மிகப் பெரிய வெற்றியடைய இப்போது 2ம் பாகம் தயாராகி வருகிறது.
நடிகர் ரஜினிகாந்த், ஜெயிலர் 2 படத்திற்குப் பிறகு எந்த படத்திலும் ஒப்பந்தமாகவில்லை என்பதால் அவர் ஓய்வு எடுப்பதாக ஒரு தகவல் பரவி வருகிறது. இது குறித்து லதா ரஜினிகாந்த் கூறுகையில், ஜெயிலர் 2 படத்திற்கு பிறகும் நடிகர் ரஜினிகாந்த் தொடர்ந்து நடிப்பார் எனக் கூறியுள்ளார்.