சிங்கப்பூர் தேர்தலில் வெற்றி பெற்ற அந்நாட்டுப் பிரதமர் லாரன்ஸ் வோங்கிற்கும் மக்கள் செயல் கட்சிக்கும் மலேசியப் பிரதமர் வாழ்த்து

கோலாலம்பூர், மே.04-

சிங்கப்பூரின் பொதுத் தேர்தலில் மக்கள் செயல் கட்சி பிஏபி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, மலேசியப் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம், சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங்கிற்கு வாழ்த்து தெரிவித்தார். மலேசியா – சிங்கப்பூரின் செழிப்பும் பாதுகாப்பும் பிரிக்க முடியாதது என்றும், வலுவான, நீண்ட கால நட்புறவைக் கொண்டுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார்.

புதிய பதவிக் காலத்தில் தலைமைப் பொறுப்பைத் தொடர்வதற்கு லாரன்ஸ் வோங்கிற்கும் அவரது அணியினருக்கும் அன்வார் வாழ்த்துகளைத் தெரிவித்தார். பன்னாட்டு வர்த்தக சூழ்நிலையில் பெரும் சவால்களை எதிர்கொள்ள இரு நாடுகளும் அனைத்து மட்டங்களிலும் ஆழமான ஒத்துழைப்பை உருவாக்கி வருவதாக அன்வார் மேலும் கூறினார்.

WATCH OUR LATEST NEWS