உலகத் தீயணைப்பு வீரர்கள் நாளை முன்னிட்டு பேரரசர் தம்பதியர் வாழ்த்து

கோலாலம்பூர், மே.04-

உலகத் தீயணைப்பு வீரர்கள் நாளை முன்னிட்டு பேரரசர் சுல்தான் இப்ராஹிமும் பேரரசியார் ராஜா ஸாரித் சோபிஃயாவும் தங்களின் வாழ்த்துக்களைத் தெரிவித்தனர். அனைத்து தீயணைப்பு வீரர்களின் தியாகம், துணிச்சல், அர்ப்பணிப்பு ஆகியவற்றுக்கு பேரரசர் தனது முகநூல் பக்கத்தில் நன்றியையும் பகிர்ந்து கொண்டார்.

“நீங்கள் சமூகத்தின் பாதுகாப்பிற்காக எப்போதும் ஆபத்தை எதிர்கொள்ளத் தயாராக இருக்கும் கதாநாயகர்கள்” என்று அவர் குறிப்பிட்டார். அதே சமயம், நம்மை விட்டுப் பிரிந்த தீயணைப்பு வீரர்களுக்கு தமது இரங்கலையும் பதிவு செய்தார்.

WATCH OUR LATEST NEWS