கட்சியின் அதிகாரப்பூர்வ நிலைப்பாடு அல்ல

சிரம்பான், மே.04-

ம.சீ.ச. கலைக்கப்பட்டு ஜ.செ.க.வில் இணைய வேண்டும் என்ற ஜ.செ.க.வின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் கருத்து, கட்சியின் அதிகாரப்பூர்வ நிலைப்பாடு அல்ல என்று அதன் பொதுச் செயலாளர் அந்தோணி லோக் தெளிவுபடுத்தினார். கம்பார் நாடாளுமன்ற உறுப்பினர் சோங் ஸேமின் கூறியது அவரது தனிப்பட்டக் கருத்து என்றும், ஜ.செ.க. இந்த விவகாரத்தை விவாதிக்கவில்லை என்றும் அந்தோணி லோக் கூறினார்.

பல இன மதிப்புகளைத் தொடர்ந்து முன்னெடுக்க விரும்பினால் ம.சீ.ச. கலைக்கப்பட்டு ஜ.செ.க.வில் இணைய வேண்டும் என்று சோங் கூறியதாக வெளியான அறிக்கைக்கு அந்தோணி லோக் இவ்வாறு பதிலளித்தார். ம.சீ.ச. சீன சமூகத்தைப் பிரதிநிதிக்கவில்லை என்றும், அம்னோ ஆதரவாளர்களின் வாக்குகளால் இரண்டு நாடாளுமன்றத் தொகுதிகளில் வெற்றி பெற்றதாகவும் சோங் குற்றம் சாட்டியுள்ளார்.

WATCH OUR LATEST NEWS