38 பேர் கைது

கோலாலம்பூர், மே.04-

தலைநகரின் மையப்பகுதியில் உள்ள 10 பொழுதுபோக்கு விடுதிகளில் காவல் துறையினர் ஓப் மேகா நோடா திடீர் சோதனையை நடத்தி, வெளிநாட்டு பாலியல் தொழிலாளர்கள் உட்பட 38 பேரைக் கைது செய்தனர். அந்த விடுதிகள் முறையான உரிமம் இல்லாமல் இயங்கி வந்ததாகவும், முறையான அனுமதி இல்லாமல் வெளிநாட்டு ஊழியர்களை வேலைக்கு அமர்த்தியதாகவும் காவல் துறையினர் சந்தேகிக்கின்றனர் என கோலாலம்பூர் காவல் துறைத் தலைவர் டத்தோ ருஸ்டி முகமட் ஈசா கூறினார்.

சோதனையில், ஜாலான் சங்காட், ஜாலான் நாகாசாரி ஆகிய பகுதிகளில் உள்ள விடுதிகளில் உகாண்டா, கம்போடியா, கென்யா ஆகிய நாடுகளைச் சேர்ந்த பெண்கள் 180 ரிங்கிட் முதல் 200 ரிங்கிட் வரை கட்டணம் பெற்று பாலியல் தொழிலில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களோடு சில உள்ளூர்வாசிகள், வங்காளதேசம், வியட்நாம், இந்தோனேசியா, இந்தியா ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களும் கைது செய்யப்பட்டனர். அதே சமயம், பொழுதுபோக்குக் கருவிகள், ஆணுறைகள், சிசிடிவி கேமராக்கள், 2 ஆயிரத்து 892 ரிங்கிட் ரொக்கப் பணம் ஆகியன பறிமுதல் செய்யப்பட்டன.

WATCH OUR LATEST NEWS