மகளிர் பிரிவின் தரத்தை உயர்த்த மலேசிய பூப்பந்து சங்கம் ஆலோசனைகளை வரவேற்கிறது

கோலாலம்பூர், மே.05-

வோங் மியூ சூவின் வருகை தேசிய அணியில் பெண்கள் ஒற்றையர் பிரிவு வீராங்கனைகளுக்கு உந்துசக்தியாக அமையும். 
 
மேலும், முன்னாள் தேசிய வீராங்கனையான மியூ சூவை மீண்டும் வரவேற்பது உட்பட, பெண்கள் ஒற்றையர் பிரிவு வீராங்கனைகளின் தரத்தை உயர்த்துவதற்கான எந்தவொரு பரிந்துரைகளையும் தேசிய அமைப்பு பரிசீலிக்கத் தயாராக இருப்பதாக மலேசிய பூப்பந்து சங்கத்தின் (BAM) செயலாளர் கென்னி கோ கூறியுள்ளார். 
 
மியூ சூ 2008 இல் உலகின் மிக உயரிய நிலையாக 7 வது இடத்தைப் பிடித்தார். மேலும் 2007 இல் சீன பொது பூப்பந்து போட்டியில் பட்டத்தைக் கைப்பற்றினார். இதன் மூலம் உலக சாம்பியன் ஜூ லின், இரண்டு முறை ஒலிம்பிக் தங்கப் பதக்கம் வென்ற ஜாங் நிங் மற்றும் இறுதியாக உலகின் நம்பர் ஒன் சீ ஜிங்ஃபாங் ஆகிய மூன்று சீன முன்னணி வீராங்கனைகளை வீழ்த்தினார். 
 
சுயேட்சை வீராங்கனை கோ ஜின் வெய் தற்போது உலகின் 43 வது இடத்தில் இருக்கிறார். 52 வது இடத்தில் கே. லெட்ஷானா உள்ளார். எனவே மகளிர் ஒற்றையர் பிரிவில் மலேசியாவின் தரம் ஆபத்தான அளவில் சரிந்துள்ளது. 
 
பிஏஎம்மில் மதிக்கத்தக்க ஒரு முன்மாதிரி இல்லாதது, வீராங்கனைகளின் தன்னம்பிக்கையைப் பாதித்து, அவர்கள் போட்டியில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்துவதைத் தடுத்து நிறுத்துவதற்கான காரணங்களில் ஒன்றாக இருக்கலாம். 
 
மியூ சூ, வீராங்கனைகளைச் சந்தித்து தனது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்வதன் மூலம் அவர்களை ஊக்குவிக்க முடியும். 
அவர்களை உயர்த்த புதிய வழிகளை முயற்சிக்க BAM தயாராக இருப்பதாகத் தெரிகிறது. 

WATCH OUR LATEST NEWS