அர்ஜுன் தாஸ் – பஃஹத் பாஃசில் கூட்டணியில் உருவாகும் ‘டார்பிடோ’!

‘துடரம்’ படத்தின் இயக்குனர், தருண் மூர்த்தி இயக்கத்தில் பஃஹத் பாஃசில் மற்றும் அர்ஜுன் தாஸ் நடிப்பில் உருவாக உள்ள புதிய திரைப்படம் ‘டார்பிடோ’. இந்த படம் பற்றிய தகவல் வெளியாகி எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது.

மலையாள இயக்குனரான தருண் மூர்த்தி இயக்கத்தில், மோகன்லால் நடித்து சமீபத்தில் ரிலீஸ் ஆன திரைப்படம் ‘துடரம்’. திரையரங்குகளில் அமோகமாக வரவேற்பைப் பெற்ற இப்படத்தை தமிழிலும் டப்பிங் செய்து, மே 9 ஆம் தேதி ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, தருண் மூர்த்தி இயக்க உள்ள படத்தில் நடிக்க போகும் நடிகர்கள் மற்றும் படத்தின் தலைப்பு குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

தனது புதிய படம் குறித்து பேசியுள்ள தருண் மூர்த்தி, தனது அடுத்த படத்தில் பஃஹத் பாஃசில் மற்றும் அர்ஜுன் தாஸ் என இரண்டு ஹீரோக்கள் நடிப்பதை உறுதி செய்துள்ளார்.  இந்த படத்திற்கு ‘டார்பிடோ’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்படம் த்ரில்லர் கதைக் களத்தில் உருவாகவுள்ளது.

சுஷின் ஷியாம் என்பவர் இப்படத்திற்கு இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு இறுதியில் அதாவது நவம்பர் அல்லது டிசம்பர் மாதம் தொடங்க உள்ளதாகக் கூறப்படுகிறது.

‘துடரம்’ திரைப்படம் ஒன்பது நாட்களில் ₹ 130 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. எனவே பஃஹத் பாஃசிலுடனான படம் மீது அதீத எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. ஃபஹத் மலையாள திரையுலகை தவிர தமிழ் மற்றும் தெலுங்கு மொழியிலும் படு பிஸியான நடிகராக உள்ளார்.

WATCH OUR LATEST NEWS