பெண்ணின் உடல் வேனிலிருந்து தூக்கி எறியப்பட்டது

கோலாலம்பூர், மே.06-

லெபுராயா ஷா ஆலாம் நெடுஞ்சாலையான கெசாஸில் வேனிலிருந்து தூக்கி எறியப்பட்டு இருக்கலாம் என்று நம்பப்படும் ஒரு பெண்ணின் சடலத்தைப் போலீசார் மீட்டனர்.

இன்று பிற்பகல் 2.58 மணியளவில் பொது மக்களிடமிருந்து கிடைக்கப் பெற்றத் தகவலைத் தொடர்ந்து கோலாலம்பூர், ஆர் & ஆர் ஓய்வுத்தளத்தில் அந்தப் பெண்ணின் உடல் மீட்கப்பட்டதாக செராஸ் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி அய்டில் போல்ஹசான் தெரிவித்தார்.

அந்த வேன் கெசாஸ் நெடுஞ்சாலையிலிருந்து பெட்டாலிங் ஜெயாவை நோக்கிச் சென்று கொண்டிருந்த போது, அந்தப் பெண் தூக்கி எறியப்பட்டுள்ளார்.

எனினும் சம்பந்தப்பட்ட வேனின் ஓட்டுநர் நிற்காமல், தப்பிவிட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

உயிரிழந்தப் பெண்ணின் விவரங்களை ஆராய்ந்த போது, 44 வயதுடைய அந்த மாது, பேரா, ஈப்போ, மெங்லெம்பு பகுதியைச் சேர்ந்தவர் என்பது அறியப்பட்டுள்ளதாக ஏசிபி அய்டில் போல்ஹசான் குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS