நாசி கோரேங் சந்தேகிக்கப்படுகிறது

தெலுக் இந்தான், மே.06-

கடந்த மாதம் பேரா தெலுக் இந்தானில் உள்ள ஓர் இடைநிலைப்பள்ளியில் 43 மாணவர்கள் விஷத் தன்மையிலான உணவை உட்கொண்ட சம்பவத்தில் அந்த விஷத்தன்மை பள்ளியின் சிற்றுண்டி சாலையில் விற்கப்பட்ட நாசி கோரேங் தொம்யாம் உணவில் கலந்துள்ளது என்று சந்தேகிக்கப்படுவதாக மாநில சுகாதார மற்றும் இந்திய சமூக விவகாரங்களுக்கான தேசிய ஒற்றுமைத்துறை ஆட்சிக்குழு உறுப்பினர் A. சிவநேசன் தெரிவித்தார்.

கடந்த ஏப்ரல் 21 ஆம் தேதி பள்ளி சிற்றுண்டிச் சாலையில் விற்கப்பட்ட விஷ உணவை உட்கொண்டதன் காரணமாக 43 மாணவர்கள் வாந்தி, வயிற்றுப்போக்குக்கு ஆளாகினர்.

சன் மின் தேசிய இடைநிலைப்பள்ளியைச் சேர்ந்த அந்த மாணவர்கள் உட்கொண்ட உணவின் மாதிரிகள் ஆராயப்பட்டதில் அந்த விஷத்தன்மை, நாசி கோரேங் தொம்யாமில் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக சிவநேசன் குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS