கோலாலம்பூர், மே.06-
கோலாலம்பூர் மாநகரின் மையப் பகுதியில் வீற்றிருக்கும் மலாய்க்காரர்களுக்குச் சொந்தமான கம்போங் பாருவை ஒரு நவீன மையமாக உருமாற்றம் காண்பதற்கான வாய்ப்பு, தாபோங் ஹாஜி அறவாரியம், பெர்மோடாலான் நேஷனல் பெர்ஹாட் அல்லது தொழிலாளர் சேமநிதி வாரியமான இபிஎஃப்பிடம் வழங்கப்பட வேண்டும் என்று முன்னாள் பிரதமர் துன் மகாதீர் முகமது பரிந்துரை செய்துள்ளார்.
நாட்டின் தலைநகரில் மலாய்க்காரர்களின் நில அடையாளமாக விளங்கி வரும் கம்போங் பாரு நிலங்கள், அவற்றின் உரிமையாளர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்படாமலேயே நவீன நகர மையமாக உருவாக்க முடியும் என்று துன் மகாதீர் குறிப்பிட்டார்.
கம்போங் பாருவை யார் மேம்படுத்த முடியும்?
தாபோங் ஹாஜி 118 மாடிக் கட்டடத்தை கொண்டுள்ளது. அதிகமான முதலீடுகளை வைத்துள்ளது. இபிஃஎப் மிகப் பெரிய நிதி வளத்தைக் கொண்டுள்ளது. எனவே இவர்களால் கம்போங் பாருவை மேம்படுத்த முடியும் என்று துன் மகாதீர் பரிந்துரை செய்துள்ளார்.