கோலாலம்பூர், மே.07-
16 லட்சத்து 50 ஆயிரம் ரிங்கிட் பெறுமானமுள்ள பண கோரிக்கை தொடர்பில் போலியான ஆவணங்களைச் சமர்ப்பித்ததாகக் கூறப்படும் டத்தோ அந்தஸ்தைக் கொண்ட மேம்பாட்டு நிறுவன இயக்குநரை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் கைது செய்துள்ளது.
60 வயது மதிக்கத்தக்க அந்த இயக்குநர், இன்று காலையில் புத்ராஜெயா நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட் சித்தி ரொஸ்லிஸாவாத்தி முகமட் ஸானின் முன்னிலையில் நிறுத்தப்பட்டு, விசாரணைக்கு ஏதுவாக வரும் மே 11 ஆம் தேதி வரை 5 நாட்களுக்குத் தடுத்து வைப்பதற்கு நீதிமன்ற அனுமதியை எஸ்பிஆர்எம் பெற்றுள்ளது.
அந்த இயக்குநர், நேற்று மாலை 5.15 மணியளவில் புத்ராஜெயா எஸ்பிஆர்எம் தலைமையகத்திற்கு அழைக்கப்பட்டு, விசாரணைக்குப் பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று எஸ்பிஆர்எம் தகவல்கள் கூறுகின்றன.