பெண்களின் உள்ளாடைகளைத் திருடி வந்த ஆடவர் கைது

ஈப்போ, மே.07-

வீட்டிற்கு வெளியே உளற வைக்கப்படும் பெண்களின் உள்ளாடைகளைத் திருடி வந்ததாக நம்பப்படும் ஆடவர் ஒருவரைப் போலீசார் கைது செய்துள்ளனர்.

கடந்த செவ்வாய்க்கிழமை ஈப்போ, மெங்லெம்புவில் ஒரு வீட்டிற்கு வெளியே பெண்களின் உள்ளாடைகள் திருடிக் கொண்டு இருந்த போது அந்த ஆடவர் அடையாளம் காணப்பட்டார்.

மோட்டார் சைக்கிளில் வந்த அந்த ஆடவர், கொடிக் கம்பத்தில் உளற வைக்கப்படும் பெண்களின் உள்ளாடைகளைத் திருடுவதை வீட்டின் முன் பொருத்தப்பட்டுள்ள ரகசிய கேமராாவில் பதிவாகியிருந்ததாக ஈப்போ மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி அபாங் ஸைனால் அபிடின் தெரிவித்தார்.

அது குறித்து 45 வயது மாது ஒருவர் செய்து கொண்ட போலீஸ் புகாரைத் தொடர்ந்து இன்று காலை 11 மணியளவில் 48 வயதுடைய அந்த நபர் கைது செய்யப்பட்டதாக ஏசிபி அபாங் ஸைனால் கூறினார்.

WATCH OUR LATEST NEWS