கோத்தா கினபாலு, மே.07-
இம்மாதம் நடைபெறவிருக்கும் பிகேஆர் கட்சியின் உயர்மட்டத் தலைவர்களுக்கான தேர்தலில் தேசிய துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிடும்படி பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் புதல்வி நூருல் இஸா வலியுறுத்தப்பட்டு வருகிறார்.
பிகேஆர் கட்சியின் உதவித் தலைவரான நூருல் இஸா, துணைத் தலைவர் பதவிக்குப் போட்டியிட வேண்டும் என்று சபா மாநில பிகேஆர் தொடர்புக் குழுவில் 21 தொகுதித் தலைவர்கள் பரிந்துரை செய்துள்ளனர்.
நேற்று சிலாங்கூர் மாநில பிகேஆரின் 18 தொகுதிகள் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில் இன்று சபா தனது பிளவுப்படாத ஆதரவை நூருல் இஸாவிற்கு வழங்கியுள்ளது.