புத்ராஜெயா, மே.07-
தனியார் கிளினிக்குகள் மற்றும் மருத்துவமனைகளில் மருந்து மற்றும் சிகிச்சை உள்ளிட்டவைகளுக்கு விலைப் பட்டியலை மக்களின் பார்வைக்கு வைக்க வேண்டும் என்ற அரசாங்கத்தின் புதிய சட்டவிதிமுறையை ஆட்சேபித்து அமைதி மறியலில் ஈடுபட்டுள்ள மருத்துவர்களின் கோரிக்கைகளை ஆராயும்படி சுகாதார அமைச்சர் டத்தோ ஶ்ரீ சுல்கிப்ளி அஹ்மாட்டை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கேட்டுக் கொண்டுள்ளார்.
நேற்று புத்ராஜெயாவில் பிரதமர் அலுவலகம் மற்றும் சுகாதார அமைச்சு ஆகியவற்றக்கு முன் கூடிய சுமார் 700 க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் ஆட்சேப மறியலில் ஈடுபட்டனர்.
பின்னர் அவர்கள் சமர்ப்பித்துள்ள கோரிக்கை மனுவான மகஜரின் உள்ளடக்கத்தை ஆராயும்படி சுகாதார அமைச்சரைப் பிரதமர் கேட்டுக் கொண்டுள்ளார் என்று அரசாங்கப் பேச்சாளர் டத்தோ பாஃமி பாஃட்சீல் தெரிவித்துள்ளார்.