கராச்சி, மே.07-
இன்று அதிகாலையில் இந்திய நடத்திய தாக்குதலை பாகிஸ்தான் பிரதமர் Shehbaz Sharif உறுதிபடுத்தினார். இந்தியாவின் ‛‛ஆபரேஷன் சிந்துார்” தாக்குதலுக்கு பதிலடி கொடுப்பதற்கு தயாராகும்படி பாகிஸ்தான் இராணுவத்திற்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.
இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் பதற்றம் மீதான பீதி உச்ச நிலையை எட்டியுள்ள வேளையில் தனது வான் போக்குவரத்துப் பாதையை அடுத்த 48 மணி நேரத்திற்கு மூடுவதாக பாகிஸ்தான் இன்று அறிவித்துள்ளது.
இந்தியாவின் இராணுவத் தாக்குதலுக்குப் பிறகு, பாகிஸ்தான் விமானப் போக்குவரத்து அதிகாரிகள் இஸ்லாமாபாத் மற்றும் லாகூர் மீதான வான்வெளியை மூடிவிட்டு, விமானங்களைக் கராச்சிக்குத் திருப்பிவிட்டனர்.
பின்னர், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முழு வான்வெளியும் அடுத்த 48 மணி நேரத்திற்கு மூடப்படுவதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது.