போதைப்பொருள் கடத்தல் – காதல் ஜோடி உட்பட மூவர் கைது

ஈப்போ, மே.08-

போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் பேரா மாநில போலீசார் ஒரு காதல் ஜோடி உட்பட மூவரைக் கைது செய்தனர்.

இந்த மூவர் கைது செய்யப்பட்டது மூலம் 46 லட்சம் ரிங்கிட் பெறுமானமுள்ள 27.4 கிலோ எடை கொண்ட பல்வேறு வகை போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பேரா மாநில போலீஸ் தலைவர் டத்தோ நோர் ஹிசாம் நோர்டின் தெரிவித்தார்.

கடந்த திங்கிட்கிழமை மஞ்சோங் மாவட்டத்தில் மூன்று வெவ்வேறு இடங்களில் சோதனையிட்ட போது பெரியளவில் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

இதில் 28 வயதுடைய ஆடவர், அவரின் காதலியான 24 வயது வியட்நாம் பெண்,ஈப்போ, சித்தியவான், சிம்பாங் தீகாவில் உள்ள ஒரு வீட்டில் கைது செய்யப்பட்டனர்.

பின்னர் அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் சித்தியவான், தாமான் செஜாத்தியில் உள்ள ஒரு அடுக்குமாடி வீட்டைச் சோதனையிட்ட போது 114 கிராம் எடைக் கொண்ட பல்வேறு வகையான போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது.

அவற்றைப் பதுக்கி வைத்திருந்ததாக நம்பப்படும் 50 வயது நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டதாக டத்தோ நோர் ஹிசாம் விளக்கினார்.

WATCH OUR LATEST NEWS