ஆற்றில் விழுந்த 15 வயது பெண்ணின் உடல் கண்டுபிடிப்பு

மஞ்சோங், மே.10-

பேரா, மஞ்சோங், பந்தாய் ரெமிஸ், கம்போங் பெந்திங் லுவாஸ் என்ற இடத்தில் உள்ள ஆற்றில் விழுந்த 15 வயது சிறுமியின் உடல் இன்று காலை 7.50 மணியளவில் கண்டுபிடிக்கப்பட்டது. ஷெர்லி ங்கு சியோக் யீ என்ற அந்த இளம் பெண், ஆற்றில் விழுந்த இடத்திலிருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் அவரின் உடல் கரையோரத்தில் சிக்கிக் கிடந்தது தெரியவந்தது.

நேற்று மாலையில் படகுத் துறையைச் சுற்றிப் பார்ப்பதற்காக ஆற்றைக் கடக்கும் பாலத்தில் நடந்து சென்று கொண்டிருந்த அந்த இளம் பெண், பாலத்தின் மக்கியப் பலகை உடைந்து, கீழே விழுந்ததில் அந்த பெண்ணும் ஆற்றில் விழுந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

தீயணைப்பு, மீட்புப் படையினரின் உதவியுடன் மீட்கப்பட்ட அந்த பெண்ணின் உடல், சவப்பரிசோதனைக்காக ஸ்ரீ மஞ்சோங் மருத்துவமனை சவக் கிடங்கிற்குக் கொண்டுச் செல்லப்பட்டுள்ளது.

WATCH OUR LATEST NEWS