ஷா ஆலாம், மே.10-
போஃர் வீல் டிரைவ் வாகனம் ஒன்று திடீரென்று தீப்பிடித்துக் கொண்டதில் ஆடவர் ஒருவர் கருகி மாண்டார். இச்சம்பவம் இன்று அதிகாலை 4.40 மணியளவில் ஷா ஆலாம் செக்ஷன் 27 இல் நிகழ்ந்தது.
தகவல் கிடைத்து சம்பவ இடத்திற்கு ஷா ஆலாம் நிலையத்தைச் சேர்ந்த அறுவர் கொண்ட தீயணைப்புக் குழுவினர் விரைந்ததாக தீயணைப்பு, மீட்புப் படையின் சிலாங்கூர் மாநில உதவி இயக்குநர் அஹ்மாட் முக்லிஸ் முக்தார் தெரிவித்தார்.
தீ நாலாபுறமும் கொழுந்து விட்டு எரிந்ததால், தீ ஜுவாலைக்குள் சிக்கிய அந்த நபர், காரிலிருந்து தப்பிக்க இயலாமல் கருகி மாண்டதாக அவர் குறிப்பிட்டார்.
இதில் அந்த ஆடவர் செலுத்திய வாகனம், 100 விழுக்காடு அழிந்ததாக அஹ்மாட் முக்லிஸ் மேலும் கூறினார்.