பிகேஆர் தேர்தலில் பதவிக்காகப் போட்டியிடவில்லை – பாஃமி பாஃட்சீல்

கோலாலம்பூர், மே.10-

பிகேஆர் தேர்தலில் மத்தியத் தலைமைத்துவ மன்ற உறுப்பினர் பதவிக்குத் தாம் போட்டியிட முன்வந்திருப்பது, பதவிக்காக அல்ல என்று அதன் தகவல் பிரிவுத் தலைவர் டத்தோ பாஃமி பாஃட்சீல் தெளிவுபடுத்தினார்.

தாம் பதவிக்காகப் போட்டியிடவில்லை என்றும், போராட்டம் மீதான நம்பிக்கையின் காரணமாகவும் இந்த முடிவைத் தாம் எடுத்ததாக அவர் விளக்கினார்.

20 ஆண்டுகளுக்கு மேலாக, ரெபோஃர்மாசி எனும் இந்த சீர்திருத்த இயக்கத்தில் நாங்கள் ஒன்றாக இருக்கிறோம்.

வீதியில் இருந்து புத்ராஜெயா வரை, சிரமத்தில் ஆழ்த்தப்பட்ட மற்றும் அநீதி இழைக்கப்பட்ட மக்களுக்கு நீதி கோருவது முதல், அனைத்து மலேசியர்களுக்கும் மிகவும் நியாயமான மற்றும் வெளிப்படையான ஓர் இயக்கத்தை மீண்டும் கட்டியெழுப்ப வேண்டும்.

அந்த முயற்சியின் ஒரு பகுதியாகவே பிகேஆர் கட்சியின் மத்திய தலைமைத்துவ மன்ற உறுப்பினர் பொறுப்புக்குத் தாம் போட்டியிடுவதாகத் தொடர்புத்துறை அமைச்சரான டத்தோ பாஃமி பாஃட்சீல் தெரிவித்தார்.

பிகேஆர் வெறும் ஓர் அரசியல் கட்சி மட்டுமல்ல, கொள்கை அடிப்படையில் சீர்திருத்தத்திற்கான ஒரு தளம் என்றும் டத்தோ பாஃமி நம்பிக்கை தெரிவித்தார்.

WATCH OUR LATEST NEWS