கோலாலம்பூர், மே.10-
இம்மாதம் நடைபெறவிருக்கும் பிகேஆர் கட்சியின் உயர் மட்டத் தலைவர்களுக்கான தேர்தலில் பல்வேறு பொறுப்புகளுக்கு மொத்தம் 251 வேட்பாளர்கள் போட்டியிடவிருப்பதாக தேர்தல் குழுத் தலைவர் டத்தோ ஶ்ரீ டாக்டர் ஸாலிஹா முஸ்தபா தெரிவித்துள்ளார்.
பிகேஆர் கட்சியின் மத்தியத் தலைமைத்துவ மன்ற உறுப்பினர் பதவிகளுக்கு மொத்தம் 104 பேர் போட்டியிடுகின்றனர். அதே வேளையில் இளைஞர் பிரிவுக்கு 85 பேரும், மகளிர் பிரிவுக்கு 62 பேரும் போட்டியிடுகின்றனர் என்று டாக்டர் ஸாலிஹா குறிப்பிட்டார்.
ஒட்டு மொத்தத்தில் மிகப் பரபரப்பாக நடைபெறவிருக்கும் பிகேஆர் கட்சியின் உயர் மட்டத் தலைவர்களுக்கான பதவிகளுக்கு 251 பேர் என்ற அளவில் மிகப் பெரிய எண்ணிக்கையைக் கொண்ட வேட்பாளர்கள் பட்டாளம், களம் இறங்கியிருப்பது இதுவே முதல் முறையாகும்.