இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம் தொடர்ந்து நிலவி வருகிறது. இந்தியாவின் எல்லையோரப் பகுதிகளில் உள்ள கிராமங்களைக் குறி வைத்து பாகிஸ்தான் தாக்குதல் நடத்தி வருகிறது. அதுமட்டும் இன்றி முக்கியமான இடங்களைக் குறி வைத்து டிரோன்களையும் பாகிஸ்தான் ஏவி வருகிறது. பாகிஸ்தானின் அத்துமீறிய செயலுக்கு இந்தியா, தக்க பதிலடியைக் கொடுத்து வருகிறது.
கடந்த மூன்று தினங்களாக பாகிஸ்தானின் அத்துமீறல் தொடர்வதால் எல்லையில் போர் மேகம் சூழ்ந்துள்ளது. இந்நிலையில், இசையமைப்பாளர் இளையராஜா, தேசிய பாதுகாப்பு நிதிக்கு நன்கொடை அளிக்க முடிவு செய்துள்ளதாகக் கூறியுள்ளார்.
என் நாடு மீது பெருமிதம் கொண்ட ஒரு இந்தியனாகவும், பாராளுமன்ற உறுப்பினராகவும், என் இசை வேலியன்ட் நிகழ்ச்சிகளில் கிடைத்த தொகையும், ஒரு மாத சம்பளமும் சேர்த்து, “தேசிய பாதுகாப்பு நிதிக்கு” நன்கொடையாக அளிக்க முடிவு செய்துள்ளேன். இந்த நன்கொடை என் “வேலியன்ட்” இசைக்கு மட்டும் அல்ல. நம் நாட்டின் வீரர்களின் வலிமைக்கும், தீவிரவாதத்தை ஒழிக்க அவர்கள் காணும் தியாகத்திற்கும் உரிய மரியாதை” என்று அவர் தெரிவித்துள்ளார்.