கோலாளம்பூர், மே.10-
பிஏஎம் எனும் மலேசிய பூப்பந்து சங்கத்தின் புதிய தலைவராக தெங்கு டத்தோ ஶ்ரீ ஸாப்ஃருல் தெங்கு அப்துல் அஸிஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இன்று கோலாலம்பூரில் நடைபெற்ற அச்சங்கத்தின் 80 ஆவது பொதுக் கூட்டத்தில் முதலீடு, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சருமான அவர் ஏகமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
தலைவர் பதவிக்கு யாரும் போட்டியிடவில்லை. எனவே தெங்கு ஸாப்ஃருல் 2025 ஆம் ஆண்டில் இருந்து 2029 ஆம் ஆண்டு வரை அப்பொறுப்பில் நீடிப்பார்.
தேசிய பூப்பந்து விளையாட்டு அனைத்துலக அரங்கில் தொடர்ந்து சிறப்புடன் இருப்பதை உறுதிச் செய்ய முழு கடப்பாட்டுடன், உறுதி மற்றும் அர்ப்பணிப்புடன் அப்பொறுப்பை ஏற்பதாக அவர் குறிப்பிட்டார். தம்முக்குள்ள அனுபவத்தைக் கொண்டு நாட்டின் பூப்பந்து துறை மென்மேலும் சிறப்புடன் விளங்க உரிய அனைத்தையும் செய்ய தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார்.
இதனிடையே முதல் துணைத் தலைவராக டத்தோ வீ. சுப்ரமணியமும் இராண்டாவது துணைத் தலைவராக டத்தோ ஶ்ரீ டாக்டர் ஜஹபர்டின் முகமட் யூனுஸும் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளனர்.