கோலாலம்பூர், மே.11-
போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, பள்ளி மாணவர்களிடையே மின்-சிகரெட் அல்லது வேப் பழக்கத்தை கண்டறிய அவ்வப்போது திடீர் பரிசோதனைகளை நடத்த அரசாங்கத்திற்குக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பள்ளி வளாகங்களில் வேப் பயன்பாட்டைத் தடை செய்வதைk கடுமையாக்குவது உட்பட உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று மலேசியா தேசிய பல்கலைக்கழகத்தின் கல்விப் புலத்தைச் சேர்ந்த முகமட் எப்ஃபண்டி@ ஏவான் முகமட் மதோர் தெரிவித்தார்.
வேப் பிடிக்கும் பழக்கத்திலிருந்து மாணவர்களைத் தடுக்கத் தொடர்ச்சியான தனிப்பட்ட ஆலோசனை அமர்வுகள் மிகவும் பயனுள்ள பங்கை வகிக்கும் என்றும் அவர் கூறினார். மாணவர்களிடையே வேப் வாங்குவதைத் தடுக்க, அனைத்து மாநிலங்களும் ஆகஸ்ட் 1 முதல் அனைத்து வளாகங்களிலும் வேப் விற்பனையைத் தடை செய்துள்ள திரங்கானுவின் அடிச்சுவடுகளைப் பின்பற்ற வேண்டும் என்று வட மலேசியா பல்கலைக்கழகத்தின் பயன்பாட்டு உளவியல், கொள்கை, சமூகவியல் ஆய்வு மையத்தின் மூத்த விரிவுரையாளர் முகமட் அலிஃப் ஜஸ்னியும் குறிப்பிட்டார்.