அனைத்து பயிற்சியாளர்களும் ஒரே பயிற்சித் தொகுதியைப் பின்பற்றுவர்

கோலாலம்பூர், மே.11-

இன்று தொடங்கிய தேசிய சேவைப் பயிற்சித் திட்டத்தின் 3.0 தொடர் 2இன் அனைத்து பயிற்சியாளர்களும், அவர்கள் பாலினத்தின் அடிப்படையில் இரண்டு வெவ்வேறு முகாம்களில் வைக்கப்பட்டிருந்தாலும், ஒரே பயிற்சித் தொகுதியைப் பின்பற்றுவார்கள். பயிற்சி தொகுதியின் உள்ளடக்கத்தில் எந்த வேறுபாடும் இல்லை என்றும், உடல் தகுதி, சுகாதார நிலை ஆகியவற்றைப் பொறுத்து மட்டுமே வேறுபாடுகள் இருக்கும் என்றும் தேசிய சேவை பயிற்சித் துறையின் தலைமை இயக்குநர் டத்தோ யாகோப் சமிரான் தெரிவித்தார்.

பயிற்சித் தொகுதியின் அடிப்படைக் கட்டமைப்பு அப்படியே இருந்தாலும், பிஎல்கேஎன் 3.0 முந்தையத் தொடர் பயிற்சியாளர்களுக்குப் பயன்படுத்தப்பட்டத் தொகுதியுடன் ஒப்பிடும்போது சில மேம்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்றார். இன்று தொடங்கிய 45 நாள் பிஎல்கேஎன் பயிற்சிக்கு 350 ஆண் பயிற்சியாளர்களும் 200 பெண் பயிற்சியாளர்களும் உட்பட மொத்தம் 550 பேர் பங்கேற்கவுள்ளனர்.

WATCH OUR LATEST NEWS