தாய்லாந்திடம் உறுதியளிப்பு கோரியுள்ளது மலேசியா

கோலாலம்பூர், மே.11

அந்தராக்ஸ் நோய் ஆபத்து உள்ள பகுதிகளில் இருந்து எந்த விலங்குகளோ அல்லது விலங்கு பொருட்களோ மலேசியாவிற்கு ஏற்றுமதி செய்யப்படாது என்று தாய்லாந்திடம் மலேசியா உறுதியளிப்பு கோரியுள்ளது. 1976 ஆம் ஆண்டுக்குப் பிறகு மலேசியாவில் அந்தராக்ஸ் நோய் கண்டறியப்படவில்லை என்று கால்நடை மருத்துவ சேவைகள் துறை தெரிவித்துள்ளது.

தாய்லாந்தில் மாடுகளை வெட்டியது, பச்சையாக இறைச்சி சாப்பிட்டது காரணமாக கடந்த மே 1 ஆம் தேதியன்று ஒருவர் இறந்ததாக வெளியானத் தகவலைத் தொடர்ந்து மலேசியா இந்த விவகாரத்தை தீவிரமாக எடுத்துள்ளது. தாய்லாந்தில் உள்ள விலங்குகள், விலங்கு பொருட்களின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகளையும், அந்தராக்ஸ் நோய் தொடர்பான அவசரகாலத் திட்டங்கள் குறித்தும் மலேசியா தகவல் கோரியுள்ளது.

WATCH OUR LATEST NEWS