2 கட்சிகளில் அங்கத்துவம் பெற்ற 28 பிகேஆர் அறுப்பினர்கள் கட்சியில் இருந்து நீக்கம்!

கோலாலம்பூர், மே.11-

அண்மையில், பிகேஆர் கட்சி தமது 28 உறுப்பினர்களை நீக்கியுள்ளது. அவர்களில் தேர்தலில் வெற்றி பெற்ற தலைவர்களும் அடங்குவர். ஏனெனில் அவர்கள் மற்ற கட்சிகளிலும் உறுப்பினர்களாக இருந்தனர் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் பூஃஸியா சால்லே தெரிவித்தார்.

கிளை மட்டத்திலான முதல் கட்ட வேட்புமனுவுக்குப் பிறகு, கட்சித் தலைவர் குழு முதலில் அடையாளம் காணப்பட்ட 36 உறுப்பினர்களை நீக்க ஒப்புக் கொண்டது. நீக்கப்பட்ட 36 பேரில் 11 பேர் மேல்முறையீடு செய்ததாகவும், அவர்கள் பிகேஆருக்கு விசுவாசமானவர்கள் என்பதற்கான ஆதாரங்களைச் சமர்ப்பித்த பின்னர் மீண்டும் உறுப்பினர்களாக ஏற்றுக் கொள்ளப்பட்டதாகவும் அவர் கூறினார்.

கிளைத் தேர்தல்கள் முடிந்த பின்னர் மேலும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதில் ஜெம்போல், பாசிர் சாலாக் தலைவர்கள், பெசுட் பிகேஆர் மகளிர் பிரிவுத் தலைவர் ஆகியோர் புகார்கள் உறுதிச் செய்யப்பட்ட பின்னர் நீக்கப்பட்டனர். பிகேஆர் உறுப்பினர்கள் கடைசியாக எந்த கட்சியில் சேர்ந்தார்கள் என்பதை உறுதிப்படுத்திய பின்னரே நடவடிக்கை எடுக்கும் என்றும் பூஃஸியா சால்லே தெரிவித்தார்.

WATCH OUR LATEST NEWS