குட்டி யானை இறந்தது

கெரிக், மே.11-

பேரா, கெரிக்-ஜெலி நெடுஞ்சாலையில் லாரி மோதியதில் குட்டி யானை ஒன்று இறந்ததை அடுத்து, அதன் தாய் யானை ஒன்று கதறுவது போன்ற உருக்கமான சம்பவம் நிகழ்ந்தது. அதிகாலை 2.50 மணியளவில் இந்தச் சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததாகவும், ஆண் குட்டி யானை சாலையின் இடது புறத்தில் உள்ள காட்டில் இருந்து திடீரென வந்ததாகவும் கெரிக் மாவட்ட காவல்துறைத் தலைவர் சுல்கிப்ளி மாஹ்மூட் தெரிவித்தார்.

கோழிகளை ஏற்றிச் சென்ற லாரியின் ஓட்டுநர், சாலையின் வலது புறத்தில் ஒரு பெரிய யானை புல் மேய்வதை முதலில் பார்த்ததாகவும், பின்னர் லாரி மோதிய குட்டி யானை சாலையின் இடது புறத்தில் இருந்து குறுக்கே வந்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.


மிக அருகில் இருந்ததால், ஓட்டுநரால் தவிர்க்க முடியாமல் மோதியதில், குட்டி யானை சம்பவ இடத்திலேயே இறந்தது. விபத்தின் காரணமாக, இறந்த குட்டி யானையின் தாய் என்று நம்பப்படும் மற்றொரு யானை ஆவேசமாகி லாரியின் முன்பகுதியைச் சேதப்படுத்தியது. ஆனால் ஓட்டுநர் காயமடையவில்லை.

WATCH OUR LATEST NEWS