நிர்வாக விசாரணை தொடங்கியுள்ளது

புத்ராஜெயா, மே.11-

எச்ஆர்டி கோர்ப் எனப்படும் மனிதவள மேம்பாட்டு நிறுவனத்தின் லெவி, முதலீட்டு நிர்வாகம் ஆகியவை தொடர்பாக நிர்வாக விசாரணையைத் தொடங்கியுள்ளது மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் நிர்வாக விசாரணைப் பிரிவு. 2024 ஆம் ஆண்டின் தலைமை கணக்காய்வாளர் அறிக்கையின் அடிப்படையில், இந்த விசாரணை நடத்தப்படுகிறது என்று ஆணையத்தின் துணைத் தலைவர் டத்தோ அஸ்மி கமாருல்ஸாமான் தெரிவித்தார்.

இந்த நிர்வாக விசாரணையின் நோக்கம், பொது அல்லது தனியார் நிறுவனங்களின் தலைவர்களுக்கு ஆலோசனை வழங்குவதும், ஊழல் அபாயங்கள், குற்றங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகளைக் குறைக்கும் வகையில் நடைமுறைகள், அமைப்புகள், வழிமுறைகளில் மேம்பாடுகளைப் பரிந்துரைப்பதுமாகும்.

மனிதவள அமைச்சும், எச்ஆர்டி கோர்ப்பின் இந்த பரிந்துரைகளைச் செயல்படுத்துவதில் முழு அர்ப்பணிப்புடன் செயல்படும் என்று தான் நம்புவதாகவும், இதன் மூலம் சிறந்த மற்றும் நிலையான நிர்வாகத்தை மேற்கொள்ள முடியும் என்றும் அவர் கூறினார்.

WATCH OUR LATEST NEWS