தேடப்படும் 25 பேரில் இருவர் மலேசியர்கள்

கோலாலம்பூர், மே.11-

இதுவரை இண்டர்போல் வெளியிட்டுள்ள சிவப்பு அறிக்கையின்படி, மலேசிய அதிகாரிகளால் தேடப்படும் 25 பேர் பட்டியலிடப்பட்டுள்ளனர். அவர்களில் இருவர் மலேசியாவைச் சேர்ந்தவர்கள். ஒருவர் மங்கோலிய மாடல் அல்தான்துயா ஷாரிபு கொலை வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட காவல் துறையின் முன்னாள் ஊடிகே அதிகாரி சிருல் அஸ்ஹார் உமார் ஆவார்.

மற்றொருவர், இல்லாத காப்பீட்டுத் திட்ட மோசடியில் ஈடுபட்டதாகத் தேடப்படும் பெண் காப்பீட்டு முகவர் குவே கோ இங் ஆவார். சிவப்பு அறிக்கையில் உள்ள மற்ற 23 பேர் மலேசியாவில் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்ட வெளிநாட்டு நாட்டினர் ஆவர்.

WATCH OUR LATEST NEWS