சிரம்பான், மே.11-
நெகிரி செம்பிலான், பாரோயில் ஐந்தாம் படிவ மாணவன் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக 17 முதல் 31 வயதுக்குட்பட்ட 10 பேர் இன்று முதல் நான்கு நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். சிரம்பான் மாவட்ட காவல்துறைத் தலைவர் உதவி ஆணையர் முகமட் ஹாட்டா சீ டின் கூறுகையில், சிரம்பான் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் காவல் விண்ணப்பம் செய்யப்பட்டது எனவும், அனைத்து சந்தேக நபர்களும் சனிக்கிழமை கைது செய்யப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.
விசாரணையை நிறைவு செய்வதற்காக எதிர்வரும் புதன்கிழமை வரை காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. இன்னும் சில சந்தேக நபர்களைத் தேடும் பணியும் தொடர்கிறது. சம்பவம் தொடர்பான படங்கள் அல்லது காணொளிகளைச் சமூக ஊடகங்களில் பரப்ப வேண்டாம் என்று பொதுமக்களுக்கு அவர் நினைவூட்டினார்.