அன்னையர்கள் கவனமாகவும் மிதமானப் போக்கையும் கடைப்பிடிக்க வேண்டும்

கோத்தா கினபாலு, மே.11-

தொழில்நுட்பப் பயன்பாட்டில் குழந்தைகளை வழிநடத்தும் போது அன்னையர்கள் கவனமாகவும் மிதமானப் போக்கையும் கடைப்பிடிக்க வேண்டும் என்று மகளிர், குடும்பம், சமூக மேம்பாட்டு அமைச்சர் நான்சி சுக்ரி வலியுறுத்தினார். இளம் தாயார்கள் அதிக வாழ்க்கைச் செலவு உட்பட பல சவால்களை எதிர்கொள்கின்றனர் என்றும், வேலை, குடும்ப அழுத்தம், நிதி நெருக்கடிகள், நேரமின்மை, குழந்தைகளின் கல்விப் பொறுப்புகள் போன்றவற்றை சமாளிக்க வேண்டியுள்ளது என்றும் அவர் கூறினார்.

நாடு முழுவதும் உள்ள அனைத்து தரப்பு பெண்களையும் மேம்படுத்தும் நோக்கத்துடன் “பெண்களை மதித்தல், நாட்டை வலுப்படுத்துதல்” என்ற கருப்பொருளில் தேசிய பெண்கள் கொள்கை 2025-2030 ஐ அமைச்சு அறிமுகப்படுத்தியுள்ளது. சபா பன்னாட்டு மாநாட்டு மையத்தில் நடைபெற்ற தேசிய அன்னையர் தின விழாவில், ஐந்து குழந்தைகளை வளர்த்து ஆளுமைகளாக மாற்றிய காஸ்மீரா ஜாபாருக்கு “2025க்கான சிறந்த தாயார்” விருது வழங்கப்பட்டது.

WATCH OUR LATEST NEWS