கோலாலம்பூர், மே.11-
இந்தோனேசியாவின் வடக்கு சுமத்ராவில் ஏற்பட்ட மிதமான நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, மலேசிய தீபகற்பத்தின் மேற்கு கடற்கரையின் சில பகுதிகளில் இன்று மாலை நில அதிர்வு உணரப்பட்டது. மலேசிய வானிலை ஆய்வுத் துறை மேட்மலேசியா தனது முகநூல் பக்கத்தில், ரிக்டர் அளவுகோலில் 5.9 ஆக பதிவான நிலநடுக்கம் மாலை 4.57 மணிக்கு 74 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாக தெரிவித்துள்ளது.
மலேசியாவுக்கு சுனாமி அச்சுறுத்தல் இல்லை என்றும், இருப்பினும் தீபகற்பத்தின் மேற்கு கடற்கரையின் பெரும்பாலான பகுதிகளில் அதிர்வு உணரப்பட்டதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தின் மையம் இந்தோனேசியாவின் பியூலாபுவிலிருந்து தென்கிழக்கே சுமார் 107 கிலோமீட்டர் தொலைவில் கண்டறியப்பட்டது.