கடந்த ஆண்டு தமிழில் வெளிவந்து மாபெரும் அளவில் வெற்றியடைந்த திரைப்படம் மகாராஜா. இப்படம் பெரிதும் பேசப்பட்டது. உலகளவில் ரூ. 200 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனைப் படைத்தது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்திருந்த இப்படத்தை இயக்குநர் நித்திலன் சுவாமிநாதன் இயக்கியிருந்தார்.
மேலும் அனுராக் காஷ்யப், நட்டி நட்ராஜ், சிங்கம் புலி, முனீஸ்காந்த், அபிராமி, மம்தா மோகன்தாஸ் ஆகியோர் முக்கியக் கதாப்பாத்திரங்களில் நடித்திருந்தனர். பிக் பாஸ் சாச்சனா விஜய் சேதுபதியின் மகளாக நடித்து ரசிகர்களிடம் பிரபலமானார்.
2024ம் ஆண்டின் மாபெரும் வெற்றி கூட்டணியாக மகாராஜா அமைந்தது. இந்த நிலையில், மீண்டும் இந்தக் கூட்டணி இணையப் போவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இயக்குநர் நித்திலன் இயக்கத்தில் மீண்டும் விஜய் சேதுபதி நடிக்கவுள்ளாராம். ஆனால், இது மகாராஜா 2 இல்லை என்றும், முற்றிலும் புதிய கதை என்றும் கூறப்படுகிறது.