கனடா வெளியுறவு அமைச்சராக அனிதா ஆனந்த் பதவியேற்றார்

ஒட்டாவா, ஏ.14-

கனடாவில் புதிய அமைச்சரவை அறிவிப்புக்கு பிறகு இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அனிதா ஆனந்த் அந்நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சராகியுள்ளார். வட அமெரிக்க நாடான கனடாவில் நாடாளுமன்றத் தேர்தல் நடந்தது. இதில், ஆளும் லிபரல் கட்சி, எதிர்க்கட்சியான கன்சர்வேட்டிவ் மற்றும் புதிய ஜனநாயகக் கட்சி ஆகியவை களமிறங்கின. இத்தேர்தலில், மார்க் கார்னி தலைமையிலான ஆளும் லிபரல் கட்சி வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டது.

தற்போது கனடா பிரதமர் மார்க் கார்னி, புதிய அமைச்சரவை குறித்து அறிவிப்பு வெளியிட்டார். அதில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அனிதா ஆனந்த் கனடாவின் வெளியுறவுத் துறை அமைச்சராகப் பொறுப்பேற்றார்.

57 வயதான அனிதா ஆனந்த், தமிழகத்தைச் சேர்ந்த தந்தை மற்றும் பஞ்சாபைச் சேர்ந்த தாயாருக்கு பிறந்தவர். அனிதா ஆனந்தின் தந்தை வழி தாத்தா சுதந்திர போராட்ட வீரராவார். அனிதா ஆனந்த் கோவை மாவட்டம் வெள்ளலூரைப் பூர்வீகமாகக் கொண்டவர். இவரது தந்தை ஆனந்த், ஒரு பொது அறுவை சிகிச்சை நிபுணர். அம்மா சரோஜ் மயக்க மருந்து நிபுணராக இருந்தவர்.

அனிதா 2019 ல் ஆக்வில்லா தொகுதியில் வெற்றி பெற்றதும், ட்ரூடோ அமைச்சரவையில் இடம் பெற்றார். அவர் போக்குவரத்துத்துறை அமைச்சர் ஆனார். 2021ல் பாதுகாப்புத்துறையில் பதவி வகித்தார்.

WATCH OUR LATEST NEWS