தாவாவ், மே.14-
சபா, லாஹாட் டாத்துவில் உள்ள தொழில்பயிற்சிக் கல்லூரியில் சக மாணவனைக் கொன்றதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள அக்கல்லூரியைச் சேர்ந்த 13 மாணவர்களுக்கு எதிரான வழக்கில் வரும் ஜுன் 11 ஆம் தேதி தீர்ப்பளிக்கப்படும்.
இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது நீதிபதி டத்தோ டுன்கான் சிகோடோல் தீர்ப்புத் தேதியை அறிவித்தார்.
கடந்த 2024 ஆம் ஆண்டு மார்ச் 22 ஆம் தேதி லாஹாட் டாத்து தொழிற்பயிற்சிக் கல்லூரியில் 17 வயது முகமட் நஸ்மி ஐஸாட் என்பவரை அடித்துக் கொன்றதாக 13 மாணவர்கள் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.