இராமசாமிக்கு எதிரான குற்றச்சாட்டுகள் அரசியல் பழிவாங்கல்

பெட்டாலிங் ஜெயா, மே.14-

பினாங்கு முன்னாள் துணை முதலமைச்சர் டாக்டர் பி. இராமசாமிக்கு எதிராகக் கொண்டு வரப்பட்டுள்ள பினாங்கு இந்து அறப்பணி வாரியம் தொடர்புடைய 17 குற்றச்சாட்டுகள் அரசியல் பழிவாங்கலாக இருக்கலாம் என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது என்று கிள்ளான், முன்னாள் எம்.பி. சார்ல்ஸ் சந்தியாகோ தெரிவித்துள்ளார்.

பினாங்கு இந்து அறப்பணி வாரியம் தொடர்பான குற்றச்சாட்டுகள் புதியவை அல்ல என்றாலும், கடந்த 2023 ஆம் ஆண்டில் அவர் ஜசெக.விலிருந்து விலகியதிலிருந்து டாக்டர் இராமசாமி அரசாங்கத்தை விமர்சித்து வருகிறார்.

இந்நிலையில், அவருக்கு எதிராகக் கொண்டு வரப்பட்ட குற்றச்சாட்டுகள் பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்துவதாக உள்ளது என்பது மட்டும் அல்ல கவலையை அளிக்கிறது என்று சார்ல்ஸ் சந்தியாகோ குறிப்பிட்டுள்ளார்.

WATCH OUR LATEST NEWS